வார்த்தைகள் சேமிப்புத் தொடர்பாக
நான் கடந்த மூன்றாட்டுற்கும் மேலாக ‘குறிப்பு’ அப் ஐ பயன்படுத்தி வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதே அப் ஐ பயன்படுத்தி இரண்டு வரலாற்று நூல்களை எழுதியுள்ளேன் என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் எழுதிய வீரகூர்ச்சவர்மன், மஹாசத்ரபதி ருத்ரதாமன் ஆகிய இரண்டு நாவல்களும் வானதி பதிப்பகத்தாரால் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. அதுபோன்று குறிப்பை உபயோகித்து, ஒருசில குறுநாவல்கள் எழுதி அமசோன் கிண்டிலில் பதிவிட்டுள்ளேன். மிகவும் உபயோகமான அப் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி. ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் எழுதிக் கொண்டிருக்கும் போது, அறியாமல் விரல் பட்டு புதுப்பக்கத்திற்கு சென்றுவிடுகிறது. அதனால் எழுதிக் கொண்டிருந்தவைகள் சேமிக்கப்படாமல் அழிந்து விடுகிறது. அதனைச் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மகிழ்ச்சியடைவேன். குறிப்பாக எழுதிக் கொண்டிருக்கும் போதே குறைந்த நேரத்தில் சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்டால் நலமாக இருக்கும். அதுபோன்று எழுதுகின்ற பொழுது வார்த்தைகள் நுகண்டு (word library) இருக்குமேயானால் சிறப்பாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி ஜெயக்குமார் சுந்தரம்